'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதம் 10ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு தரப்பில் அனுமதி தரப்பட்டது.
டிசம்பர் மாதத்திலேயே அதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என தியேட்டர் சங்கங்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தன. இருப்பினும் அனுமதி வழங்கப்படவில்லை. எப்படியும் புத்தாண்டு பரிசாக அனுமதி தந்துவிடுவார்கள் என எதிர்பார்த்தார்கள், அதுவும் நடக்கவில்லை.
கடந்த வாரத்தில் நடிகர் விஜய் கூட தமிழக முதல்வரைச் சந்தித்து அது தொடர்பான கோரிக்கையை வைத்தார். விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் ஜனவரி 13ம் தேதியன்றும், சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' படம் ஜனவரி 14ம் தேதியன்றும் வெளியாக உள்ளன.
எப்படியும் அதற்குள் 100 சதவீத அனுமதி கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அப்படக்குழுவினரும், தியேட்டர்காரர்களும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் அதற்குள் அறிவிப்பு வெளியாகுமா என்ற பரபரப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் மட்டுமே 'மாஸ்டர்' போன்ற படங்கள் லாபத்தை எட்டி முடியும். எனவே, திரையுலகத்தினர் சார்பில் அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்களா அல்லது அவர்களாகவே அறிவிக்கும் வரை அமைதி காப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.