பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் |
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறார், சென்னை மற்றும் பெங்களூருவில் படப்பிடிப்பு தளங்கள் அமைத்துள்ளார்.
தற்போது 'வேல்ஸ் மியூசிக்' என்ற புதிய இசை நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், தனுஷ், பிரபுதேவா, இயக்குநர்கள் ஷங்கர், சுந்தர் சி, விஜய் ஆண்டனி, நெல்சன், ஆர்.கே.செல்வமணி, மாரி செல்வராஜ் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, லலித், நடிகர்கள் அருண் விஜய், கிர்த்தி ஷெட்டி, மீனா, பார்த்திபன், ஆர்.வி.உதயகுமார், கே.பாக்யராஜ், வசந்த் ரவி, ரெஜினா, ஆதித்யராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஐசரி கணேஷ் கூறும்போது "பிரபலமான இசைக்கலைஞர்கள், சுயாதீன கலைஞர்கள் மற்றும் புது திறமையாளர்களுக்கான களத்தை உருவாக்கும் தளமாக 'வேல்ஸ் மியூசிக்' செயல்படும். மேலும் இந்தத் தளம் கிரியேஷன், மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தையும் கவனிக்கும்" என்றார்.