ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மல்டி ஸ்டார் படங்கள் என்றாலே ரசிகர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பு தானாக வந்துவிடும். அந்தவகையில், தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் தான் நரகாசூரன். அரவிந்த்சாமி, சந்தீப், இந்திரஜித் என முக்கிய ஹீரோக்கள் நடித்துள்ளனர்.
துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இரண்டாவது படம் என்பதும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.. இந்தப்படத்தை வரும் ஆக-31ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்தனர். அன்றைய தினம் 6 படங்கள் வரை ரிலீஸாகிறது.
இதனால், இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை செப்-13ஆம் தேதிக்கு மாற்றி விநாயகர் சதுர்த்தி ரிலீஸாக வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அன்றைய தினமும், சீமராஜா உள்ளிட்ட சில படங்கள் ரிலீசாக இருக்கிறது.