ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். திருமணத்திற்கு பிறகு அவருக்கு சரியான படங்கள் இல்லை. ஆனபோதும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். தற்போது சீமராஜா, துருவ நட்சத்திரம், ரஜினியின் 165வது படம் என மீண்டும் பிசியாகி வருகிறார்.
அதேசமயம், எந்த படத்திலும் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று தனது நிலையை திட்டவட்டமாக கூறி வருகிறார் சிம்ரன். மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கலாம். பாலிவுட்டில் திருமணமான பல நடிகைகள் தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான பேனி கான், கரீனா கபூர் நடித்த வீரே தி வெட்டிங் ஆகிய படங்களில் அவர்கள் நடித்தது போன்ற வேடங்களில் நடிப்பதற்கு ஆவலாக உள்ளேன். அதுபோன்ற கதைகளுக்கு காத்திருக்கிறேன் என்கிறார் சிம்ரன்.