ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் ஜெய் ஆகாஷ் நடித்து, இயக்கும் படம் சென்னை டூ பாங்காக். இதில் அவருடன் சோனி சிரிஸ்டா, யாழினி உள்பட 4 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர யோகி பாபு, கும்கி அஸ்வின், பவர் ஸ்டார் சீனிவாசன், சாம்ஸ், பொன்னம்பலம் உள்பட பலர் நடிக்கிறார்கள். யு.கே.முரளி இசை அமைக்கிறார், தேவராஜ், பாலா ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
"இந்தியாவில் இருந்து பாங்காங்கிற்கு கடத்தப்படும் பெண்களை இளைஞன் ஒருவன், மீட்டுவர தனி ஆளாக கிளம்புகிறான். அங்கே சென்றதும், அந்த பெண்கள் அனைவருக்கும் தீவிரவாத பயிற்சி அளித்து மீண்டும் இந்தியாவுக்கே நாசகார வேலைகளை செய்ய தயார்படுத்துகிறார்கள் என்கிற அதிர்ச்சியான விபரம் தெரிய வருகிறது.
அந்த கூட்டத்தின் சதியை முறியடித்து அந்த பெண்களை இந்தியாவிற்கு அந்த இளைஞன் எப்படி மீட்டு வருகிறான் என்பது தான் படத்தின் கதை. இதை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் விதமாக ஜனரஞ்சகமாக சொல்லப்பட்டு இருக்கிறது. விறுவிறுப்பான சண்டை காட்சிகளும் இடம்பெறுகிறது. 4 ஹீரோயின்களுடன் ஆடிப்பாடும் பாடல் காட்சி ஒன்று பட்டயா தீவில் படமாக்கப்பட்டுள்ளது" என்கிறார் ஜெய் ஆகாஷ்.