ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.. கடந்த 2014ஆம் வருடம் இவர் திருமணம் செய்துகொண்டாலும் கூட, மற்ற சில நடிகைகளைப்போல சினிமாவை விட்டு முழுவதுமாக ஒதுங்கிவிடாமல் அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டி வருகிறார்.
இந்தநிலையில் தற்போது பாலிவுட் இயக்குனர் அஜய் வர்மா என்பவர் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் 'நீராளி' படத்தில் அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குமுன் மோகன்லாலுடன் ரசதந்திரம், இன்னத்தே சிந்த விஷயம், லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் என மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின்.