தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழகத்தின் முன்னணி ஆளுமைகளில் ஒருவரும், பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவரும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் சினிமாவானது. இதை 'ஊமை விழிகள்' படத்தை இயக்கிய அரவிந்த்ராஜ் இயக்கி இருந்தார். முத்துராமலிங்கத் தேவராக பஷீர் என்பவர் நடித்திருந்தார். இந்த நிலையில் தேவராக நடித்ததால் என்னை வீட்டுக்குள் புகுந்து மிரட்டுகிறார்கள் என்று பஷீர் புகார் கூறியுள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை 'தேசிய தலைவர் தேவர் பெருமகன்' என்கிற படத்தில் நான் முத்துராமலிங்கத் தேவராக நடித்துள்ளேன். மதுரையில் ரசிகர்களுடன் அந்தப் படத்தை பார்க்க வந்துள்ளேன். இந்த படம் விஜய், அஜித் படங்களை போன்று மாஸான படம் இல்லை. ஆனாலும் கோயிலுக்கு செல்வதைப் போல குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கிறார்கள். திரையில் அவர்கள் என்னைத் தேவராக பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
நான் ஒரு இஸ்லாமியன். எனக்கு இந்த பிறவியில் தேவர் பெருமானின் வேடத்தில் நடித்துள்ளேன் என்றால் போன ஜென்மத்தில் அவர் வீட்டின் நாயாக நான் பிறந்திருப்பேன், அதனால் தான் எனக்கு இந்த பாக்கியம் கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் எடுத்து சென்று சேர்ப்போம். இந்த படத்தில் எங்குமே அவரை ஜாதிய தலைவராக அடையாளப்படுத்தவில்லை. அவர் தேசிய தலைவர், சாதிய தலைவர் அல்ல, சாதிக்க பிறந்த தலைவர் என்பது தான் இந்த படம்.
படத்தை பார்த்துவிட்டு பெரிய அதிகாரிகள் முதல் அரசியல் பிரமுகர்களை வரை என்னை பாராட்டி இருக்கிறார்கள். சென்னை செங்கல்பட்டு பகுதிகளில் ஜாதிய படம் என்று சொல்வதால் திரையரங்குகள் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார் .
என் வீட்டிற்கு வந்து என்னை மிரட்டுகிறார்கள். அது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை. அய்யா துணை எனக்கு இருக்கிறது நான் பார்த்துக் கொள்வேன். என் உயிர் உள்ளவரை அய்யா முத்துராமலிங்க தேவருக்கு நான் கடைசி தொண்டனாக இருக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.