‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் |

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான பிரேமலு படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர் நடிகை மமிதா பைஜு. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் அவர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இன்னொரு பக்கம் இன்று வெளியாகி உள்ள டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அவரது தாய் மொழி மலையாளம். இந்த நிலையில் கொச்சியில் நடைபெற்ற டியூட் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் அந்த படத்தை வெளியிடும் கேரள தயாரிப்பாளர், மமிதாவிடம் உங்களுக்கு எந்த மொழி படப்பிடிப்புகளில் நடிப்பது சவுகரியமாக இருக்கிறது என்று ஒரு கேள்வியை கேட்டார்.
இதற்கு பதில் அளித்த மமிதா பைஜு, “மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கும்போதும் அந்தந்த மொழிகளின் படப்பிடிப்புக்கு என்னை மாற்றிக் கொள்வதற்கு ஏற்ற வகையில் ஒரு கிளீன் ஸ்லேட் ஆகத்தான் செல்கிறேன். அங்கிருக்கும் சூழலை உள்வாங்கி அதற்கேற்றபடி என்னை மாற்றிக் கொள்வதால் எந்த மொழி படப்பிடிப்பிலும் பாஷை, சாப்பாடு, கிளைமேட் தவிர்த்து எனக்கு இதுவரை எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை. ஏன், மலையாளத்தில் கூட ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் போது இரண்டு யூனிட்டுகளிலும் பணியாற்றியதில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை புரிந்து கொண்டு வேலை செய்வதால் எந்த பிரச்சனையும் வருவதில்லை” என்று சாமர்த்தியமாக பதில் கூறினார்.