ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சமீபத்தில் கரூரில் விஜய் பிரசாரம் செய்யும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது நாட்டையே உலுக்கியது. பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்கள்.
இவர்களை தொடர்ந்து நடிகை அம்பிகா நேற்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் இறந்துள்ளனர். அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க கரூர் வந்தேன். யாரையும், எந்தக் கட்சியையும் குறை சொல்வதற்காக நான் வரவில்லை. சம்பவம் நடந்ததற்கு யார் மீது தவறு என்பதை சொல்வதற்கும் நான் வரவில்லை.
இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. அரசியல் கூட்டங்களுக்கு குழந்தைகளை தூக்கிக்கொண்டு செல்லக்கூடாது என்று அரசும், கட்சிகளும் அறிவுரை கூறுகின்றனர். ஆனால், அதையும் மீறி குழந்தைகளை தூக்கிக்கொண்டு செல்கின்றனர். பெண்கள், குழந்தைகள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது. நான் கரூர் வந்துள்ளது குறித்து என் மீது எந்த சாயமும் பூச வேண்டாம். நான் எந்த கட்சியை சார்ந்தும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.




