தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய 75வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு பல மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா ஆகியோர் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை எக்ஸ் தளம் மூலம் தெரிவித்துள்ளார்கள்.
ரஜினிகாந்த்
மிகவும் மதிப்பிற்குரிய, கவுரவமான, மற்றும் என் அன்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு, உங்கள் பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நம் அன்பிற்குரிய நாட்டை வழிநடத்துவதற்கு என்றும் நிலைத்திருக்கும் வலிமை வேண்டுமென வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த்.
கமல்ஹாசன்
மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு நல்ல ஆரோக்கியமும், இந்திய மக்களின் சேவையில் வலிமையும் வேண்டுமென வாழ்த்துகிறேன்.
இளையராஜா
மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது ஊக்கமளிக்கும் தலைமையும் அர்ப்பணிப்பும் இந்தியாவை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தி வருகிறது. உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வலிமையான, மேம்பட்ட இந்தியாவை உருவாக்கும் உங்கள் பயணத்தில் மேலும் வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்.