20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு |

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி மகன் ஜித்தன் ரமேஷ். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இவர் நடிக்கும் 16வது படம் ‛ஹிட்டன் கேமரா'. படம் குறித்து ஜித்தன் ரமேஷ் பேசியதாவது: அருண் ராஜ் இயக்கும் இந்த படம் உயிர், நேரத்தின் மகிமையை விவரிக்கிறது. நான் வெளிநாட்டில் இருந்து சென்னை வருபவனாக நடிக்கிறேன். ஹிட்டன் கேமராவுக்கும் படத்துக்கும் சம்பந்தம் உள்ளது. புதுமுகம் கிருஷ்ணா ஹீரோயின். அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
சூப்பர் குட் நிறுவனம் 99வது படத்தை தயாரித்து வருகிறது. 100வது படம் பிரமாண்டமாக, பெரிய ஹீரோ வைத்து தயாரிக்க உள்ளோம். இன்னமும் ஹீரோ, இயக்குனர் முடிவாகவில்லை. அந்த படத்தில் நானும், ஜீவாவும் கவுரவ வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. 100வது படத்துக்காக விஜயிடம் கதை சொன்னோம். அது நடக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.