இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
சூப்பர் குட் நிறுவனத்தை 1990ல் தொடங்கினார் ஆர்.பி.சவுத்ரி. புதுவசந்தம் தொடங்கி ஏகப்பட்ட படங்களை தயாரித்தார். அவர் தமிழராக இல்லாவிட்டாலும், தமிழில் அதிக புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற்றார். இப்போது ரவி அரசு இயக்கத்தில் விஷால், துஷாரா விஜயன் நடிக்கும் படம், சூப்பர் குட் நிறுவனத்தின் 99வது படம்.
இந்நிலையில், பலருக்கும் எழுகிற கேள்வி, இந்த நிறுவனத்தின் 100வது படத்தை இயக்குவது யார்? தயாரிப்பது யார் என்பதுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் குட் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்டது. அதை ஆர்.பி.சவுத்ரி மகனான ஜீவாவும் உறுதிப்படுத்துவது போல பேசி வந்தார். ஆனால், விஜய் சம்பளத்தை கேட்ட ஆர்.பி.சவுத்ரி, அந்த தொகை கொடுத்தால் நஷ்டம் உறுதி, அவர் கால்ஷீட் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். விஜயும் வேறு தயாரிப்பாளர் பக்கம் போய் விட்டார். இப்போது 100வது படத்தில் நடிப்பது யார் என்பது கேள்வியாக இருக்கிறது. தமிழில் மார்டன் தியேட்டர்ஸ், ஏவிஎம் போன்ற சில நிறுவனங்களே 100 படங்களை தயாரித்து இருக்கின்றன. அந்த பெருமையை விரைவில் சூப்பர் குட் பெற உள்ளது.