என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

நடிகர் தனுஷ் சில ஆண்டுகளாக கருங்காலி மாலை அணிந்து வருகிறார். அதை பின்பற்றி அவருடைய ரசிகர்கள், இன்னும் சிலர் அணிகிறார்கள். கருங்காலி மாலைக்கு அந்த சக்தி, இந்த சக்தி என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால், தான் எப்படி அந்த மாலை அணிந்தேன் என்பதற்கு இட்லி கடை விழாவில் புது காரணம் சொன்னார தனுஷ். அவர் சொன்ன விளக்கம்...
உண்மையில் இது என்ன மாலை என எனக்கு தெரியாது. என் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டு ஊரில் போய் பார்த்தேன். அப்போது என் தாத்தா போட்டோவில் இந்த மாலை மாட்டியிருந்தது. அதை பார்த்தவுடன் எனக்கு அதை தர முடியுமா என்று பாட்டியிடம் கேட்டேன். இது சாதாரண மாலை அல்ல, அவர் 40 ஆண்டுகள் போட்டிருந்த மாலை, அதுவும் நிறைய பக்தியுடன் தினமும் மந்திரங்கள் சொல்லி போட்டிருந்த மாலை என்றார்.
நான் கேட்டவுடன், நேராக என் தாத்தா போட்டோ முன்னால் போய் பாட்டி பேசினார். நமக்கு எத்தனையோ பேரப்பிள்ளைங்க இருந்தாலும், இவன்தான் இந்த மாலை அருமை உணர்ந்து கேட்கிறான். அதை கொடுக்கிறேன் என்றார். அது வந்தபின் எனக்கு தனி உற்சாகம். கருங்காலி மாலை அதை செய்யும், இதை செய்யும் என்றார்கள். உண்மையில் என்னை ஒன்றும் செய்யாது. ஏனெனில் இது என் தாத்தா மாலை என கலகலவென பேசினார்.
மேலும் அவர் என்னை பற்றி பெருமையாக பேசமாட்டேன். ஆனால் நான் நல்ல தகப்பன். இந்த 42 வயதில் இன்னும் சாதிக்க ஆசைப்படுகிறேன். அதனால், என் பயோபிக் படம் பற்றி யோசிக்கவில்லை. நான் தேசிய விருது வாங்கிவி்ட்டேன். ஹாலிவுட் படத்தில் நடித்துவிட்டேன். ஆஸ்கர் விருது பற்றி கேட்கிறார்கள். அது தலையில் இருப்பது போல நடக்கும் என்றார்.