பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் |

ஜிஎஸ்டி வரி விதிப்பில் பெரும் மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கு இரண்டு விதமான வரி விதிகங்கள் இருந்தது. 100 ரூபாய்க்கும் குறைவான டிக்கெட் கட்டணங்களுக்கு 12 சதவீத வரியும், 100 ரூபாய்க்கும் அதிகமான டிக்கெட் கட்டணங்களுக்கு 18 சதவீத வரியும் இருந்தது.
அதை தற்போது 12 சதவீத வரி விகிதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளனர். ஆனால், 18 சதவீதம் இருக்கும் விகிதத்தில் எந்த மாற்றமுமில்லை, அப்படியேதான் இருக்கிறது. இதனால், சினிமா தியேட்டர்களுக்கு பெரிய பயன் இல்லை என அவர்கள் கருதுகிறார்கள்.
பெரும்பாலான தியேட்டர்களில் 100 ரூபாய்க்கும் அதிகமாகத்தான் டிக்கெட் கட்டணம் உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான தியேட்டர்களில்தான் 100 ரூபாய்க்கும் குறைவான கட்டணங்கள் உள்ளன.
18 சதவீத வரி என்று இருப்பதை குறைத்தால்தான் மக்கள் தியேட்டர்களுக்கு வருவது அதிகரிக்கும் என்கின்றனர். சமீபத்தில் தமிழக அரசு கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைத்தது. அது போல ஜிஎஸ்டி வரியையும் மொத்தமாக 5 சதவீதத்திற்குக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்கள்.
ஏற்கெனவே திரையுலகம் நலிந்து வரும் நிலையில் இந்த வரிக்குறைவுப் அவசியம் தேவைப்படுகிறது என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.




