அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி |

நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் டொம்னிக் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படம் உலகளவில் 100 கோடி வசூலித்துள்ளது. அதையொட்டி படக்குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நன்றி தெரிவித்து வருகிறார்கள். சென்னையில் நடந்த விழாவில் நடிகர் துல்கர் பேசுகையில், ‛‛லோகா வெற்றி பெற்றது மகிழ்ச்சி. அடுத்து 5 அல்லது அதற்குமேல் பாகங்களாக இந்த படம் வரலாம். நல்ல படங்களுக்கு தமிழக ரசிகர்கள் தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்கிறார்கள். விரைவில் படக்குழுவுக்கு பரிசுகள் அளிக்க உள்ளேன். அப்பா மம்முட்டி நலமாக இருக்கிறார் என்றார்.
கல்யாணி பிரியதர்சன் பேசுகையில், "நான் ஆக்ஷன் படத்தில் நடிக்க போகிறேன் என்றவுடன் அப்பா பிரியதர்ஷன் கை கால் பத்திரம் என்றார். இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கவில்லை. சூர்யா, ஜோதிகா ஆகியோர் வீடியோ காலில் வாழ்த்தினார்கள். பல இடங்களில் இருந்து வாழ்த்து வந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு ஹீரோயின் ஓரியண்ட் படம் தென்னிந்தியாவில் 100 கோடி வசூலித்து இருப்பது இதே முதன் முறை என்கிறார்கள். அவ்வளவு மகிழ்ச்சி ஆக இருக்கிறது என்றார்.
ஹீரோ நஸ்லனும் தமிழக மக்களுக்கு நன்றி என்றார்.




