ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜயகாந்த் இளையமகன் சண்முகப்பாண்டியன் ‛சகாப்தம்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். 2015ல் வெளியான அந்த படம் ஹிட்டாகவில்லை. அடுத்து ‛மதுரவீரன்' என்ற படத்தில் நடித்தார், அதுவும் பெரிய வெற்றிபெறவில்லை. சற்றே இடைவெளிக்குபின் அவர் நடித்த ‛படைத்தலைவன்'-ம் சரியாக போகவில்லை. இப்போது ‛கொம்புசீவி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை ‛வருத்தப் படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் கமர்ஷியலாக உருவாக்கி வருகிறார்.
இதற்கிடையில், சண்முகப்பாண்டியனை வைத்து ‛ரமணா 2' எடுக்க ரெடி என்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ‛கேப்டன் பிரபாகரன் 2' உருவாக்க தயார் என்கிறார் ஆர்.கே.செல்வமணி. ஆனால், இந்த படங்கள் தயாரிப்பதில் சிக்கல். காரணம், சண்முகபாண்டியன் மார்க்கெட் காரணமாக இந்த படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.
சண்முகபாண்டியன் மாமாவும், பிரேமலதா தம்பியுமான எல்.கே.சுதீஷ் பிரபல தயாரிப்பாளர். அவர் விஜயகாந்த்தை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்தவர். அவர் மருமகனுக்காக இந்த படங்களை தயாரித்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் கோலிவுட்டில். அரசியல் குடும்பத்தில் இருந்து வந்து இருப்பதால் அவரை வைத்து படம் தயாரிக்க சிலர் தயங்குகிறார்கள். படப்பிடிப்பு, படம் ரிலீஸ் சமயத்தில் சிக்கல் வருமோ என்று பயப்படுகிறார்கள். அதனால், தகுந்த தயாரிப்பாளர் இல்லாமல் சண்முகபாண்டியன் தவிப்பதாக தகவல்.