என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
பிரபல தெலுங்கு நடிகர் விஜய்தேவரகொண்டா நடித்த 'கிங்டம்' படம், நாளை (ஜூலை 31) ரிலீஸ் ஆகிறது. இந்த பட விளம்பர நிகழ்வுக்காக சென்னை வந்த விஜய்தேவரகொண்டா பேசியது: கிங்டம் படத்தில் நான் போலீசாக வருகிறேன். 1990 பின்னணியில் கதை நடக்கிறது. இது ஆக்ஷன் படம் மாதிரி தெரிந்தாலும் அண்ணன் தம்பி பாசமும் முக்கியமானதாக இருக்கும். ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு சென்றவர்கள் அங்கேயே தனி ராஜ்ஜியம் நடத்தினார்கள். அந்த பின்னணியிலும் கதை நகர்கிறது. இலங்கையிலும் நிறைய நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.
இதற்கு முன்பு 'கீதகோவிந்தம், குஷி' போன்ற காதல் படங்களில் நடித்தேன். அந்த படங்களுக்கு நல்ல கிடைத்தது. நிறைய ரசிகைகள் கிடைத்தனர். என்னை மாதிரி மணமகன் வேண்டும் என பல பெண்கள் ஆசைப்பட்டனர். இப்போது ஆக்ஷன் படங்களில் அதிகம் நடிக்கிறேன். எனக்கும் பழையபடி கல்லூரி, காதல் கதைகளில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவருடன் நேரம் செலவழித்ததை மறக்க முடியாது. அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். எனக்கு முதலில் திருமணமா? அனிருத்துக்கு முதலில் திருமணமா? என்று கேட்கிறார்கள். என்னை விட அனிருத் வயதில் சிறியவர். ஆகவே, எனக்கு ஓரிரு ஆண்டில் திருமணம் நடக்கும்.
கிங்டம் படத்தின் டீசருக்கு சூர்யா வாய்ஸ் கொடுத்தார். அவருக்கு நன்றி. என்னுடைய சின்ன வயதில் டீச்சர் உட்பட யாரும் என்னை பாராட்டியது இல்லை. இந்த படம் முடிந்தவுடன் நான் நன்றாக நடித்து இருப்பதாக இயக்குனர் போன் போட்டு என் அம்மாவிடம் பேசியிருக்கிறார். அந்த பாராட்டை மறக்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.