இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஒருகாலத்தில் நடிகர் அஜித், இயக்குனர் சரண் கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக இருந்தது. இவர்கள் இணைந்து பணியாற்றிய காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய சூப்பர் ஹிட்டாகின. கடைசியாக இவர்கள் கூட்டணியில் 2010ல் அசல் படம் வெளியானது. ஆனால் இந்தப்படம் தோல்வி அடையவே அதன்பின் இவர்கள் இணைந்து பணியாற்றவில்லை.
இந்நிலையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி இணைய போவதாக கோலிவுட்டில் செய்தி பரவி உள்ளது. சமீபத்தில் அஜித்தை சந்தித்து சரண் ஒரு கதை கூறியுள்ளார். அஜித்திற்கும் அது பிடித்து போய் உள்ளதாம். தனக்கு சினிமாவில் பெரிய பிரேக் தந்த இயக்குனர் என்பதால் சரணுக்கு ஒரு வெற்றி தர அஜித் இப்படத்தில் நடிக்க சம்மதித்து உள்ளதாக கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித் 64வது படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க போகிறார். அதையடுத்து தனது 65வது படத்தை சரண் இயக்குவதற்கு அஜித் நம்பிக்கை தந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.