அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

1980களில் ஹீரோக்கள் 2 வேடங்களில் நடிப்பதை ஒரு சாதனையாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் பெரும்பாலான ஹீரோக்கள் இரண்டு வேடங்களில் நடித்தார்கள். இந்த வரிசையில் அப்போது வேகமாக வளர்ந்து வந்த டி.ராஜேந்தரும் தன் பங்கிற்கு 2 வேடங்களில் நடித்த படம் 'உறவைக் காத்த கிளி'. இந்த படத்தில்தான் தன் மகன் சிம்புவையும் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.
டி.ராஜேந்தருடன் சரிதா, ஜீவிதா, புஷ்பலதா, எஸ்.எஸ்.சந்திரன், நளினி, சங்கிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தஞ்சை சினி ஆர்ட்ஸ் சார்பில் அவரே தயாரித்தும் இருந்தார். இசையும் அவரே. படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானாலும், அவரது முந்தைய படங்களை போன்று இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. காரணம் அவரது இரட்டை வேட நடிப்பை அவரது ரசிகர்கள் மட்டுமே ரசித்தார்கள். ஜீவிதா, ஜெயந்த் இளம் ஜோடிகளாக நடித்திருந்தார்கள்.
மதுவின் கேடு-ஐ மையப்படுத்தி உருவாகி இருந்த இந்தப் படத்தில் டி.ராஜேந்தர் குடிகாரராகவும், குடிக்கு எதிரானவராகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.