சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் வலம் வந்த பல ஹீரோக்களே வரலாற்றில் பதிவாகாமல் போய்விட்டார்கள். அப்படி இருக்கும்போது குணசித்ர நடிகர்கள் மட்டும் எப்படி பதிவாகியிருப்பார்கள். அதையும் தாண்டி ஒரு சிலரைப் பற்றி தகவல்கள் இப்போது வரை சிறிதளவேணும் வந்திருக்கிறது. அப்படியானவர்களில் ஒருவர்தான் ஆர்.பாலசுப்பிரணியம்.
ஆஜானுபாகுவான உடல். கம்பீரமான பார்வை. தெளிவான வசன உச்சரிப்பு. வில்லன் கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் தோற்றமளித்தவர். என்றாலும் குணசித்ர கதாபாத்திரங்களையும் ஏற்று கொடுத்த வேடத்திற்கு பங்கம் விளைவிக்காமல் நடித்துப் பெயர் பெற்றவர். பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட அன்றைய முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்தவர். 1938 முதல் 1971 வரை சுமார் 100 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நாடகங்களில் சீதையாக நடித்து புகழ்பெற்ற இவர் சினிமாவிலும் சில படங்களில் பெண்ணாக நடித்துள்ளார். ஆனால் அது பற்றிய தகவல் எதுவும் இல்லை. பாலசுப்பிரமணியத்தின் நாடகத்தைப் பார்த்த ஸ்ரீராமுலு நாயுடு துக்காராம் (1938) படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இறுதியாக 1964ம் ஆண்டு வெளிவந்த 'கர்ணன்' படத்தில் நடித்தார். பல வருட இடைவெளிக்கு பிறகு 1971ம் ஆண்டு வெளிவந்த 'ஆதிபராசக்தி' படத்திலும் நடித்தார்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுவாமி மலையில் பிறந்த இவர், கும்பகோணம் உயர்நிலை பள்ளியில் படித்து அங்கேயே ஆசிரியராக பணியாற்றினார். கும்பகோணத்தில் செயல்பட்ட 'வாணி விலாஸ்' நாடக கம்பெனி மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கியவர்.