டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் தனது 29வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது விளம்பரப் படங்களிலும் நடிப்பவர் மகேஷ்பாபு.
ரியல் எஸ்டேட் விளம்பரப் படம் ஒன்றில் நடித்த மகேஷ்பாபு அதற்காக பெற்ற சம்பளம் குறித்த விசாரணை தற்போது அமலாக்கத்துறையில் நடந்து வருகிறது. அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்று மக்களை ஏமாற்றியதாக, அந்த நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது மகேஷ்பாபு விளம்பரப் படத்தில் நடித்தற்காக பெற்ற சம்பளமும் விசாரணை வளையத்தில் சிக்கியது. அந்த நிறுவனத்திடமிருந்து அவர் எந்த விதத்தில் சம்பளம் பெற்றார் என்பதைத் தெரிவிக்க, அவருக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி அவர் இன்று ஆஜராக வேண்டும்.
ஆனால், தனக்கு கூடுதல் அவகாசம் தரும்படி மகேஷ்பாபு பதில் கடிதம் எழுதியுள்ளாராம். வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதுதான் அதற்குக் காரணம் என சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.