டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் |
காதல் சர்ச்சைகளில் சிக்கிய நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் கடந்த சில பல வருடங்களாகவே மும்பையில் வசித்து வருகிறார். அவருடன் சில நடிகர்களை இணைத்து அடிக்கடி காதல் கிசுகிசுக்கள் வந்ததுண்டு.
ஆனாலும், எந்த மறைவும் இல்லாமல் அவரே வெளிப்படுத்திய இரண்டு காதலர்கள் உண்டு. ஒருவர் ஆங்கிலேயே நடிகர் மைக்கேல் கோர்சேல். அவரை சென்னைக்கு அழைத்து வந்து அப்பா கமல்ஹாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், இருவரும் பிரிந்தார்கள்.
அதற்கடுத்து ஓவியர் சாந்த ஹசரிகா என்பவரைக் காதலித்தார் ஸ்ருதி. இருவரும் லிவிங் டு கெதர் ஆகவே வாழ்ந்தார்கள் என்று தகவல். தனது வீட்டில் அவருடன் இருக்கும் பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் ஸ்ருதி. பின்னர் அவர்களிருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், “நான் இப்போது முழுமையான சிங்கிள். யாருடனும் மிங்கிள் ஆக விரும்பவில்லை. நடித்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வருகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இப்போதும் கூட ஸ்ருதியும், திருமணமான ஒரு முன்னணி இயக்குனரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.