பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா |
ரஜினிகாந்த் நடித்த கூலி படம் நாளை மறுநாள் ரிலீஸ். தமிழகத்தில் முதற்காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு வாரமும் 7க்கும் அதிகமான படங்கள், கடந்த வாரம் 10 படங்கள் வரை ரிலீஸான நிலையில், இந்த வாரம் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ரஜினி டயலாக் பாணியில் சிங்கம் சிங்கிளாக வருகிறது.
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான தியேட்டர்களில் கூலி திரையிடப்படுகிறது. தமிழகத்தில் இப்போது அதிகாலை காட்சிக்கு அதாவது அதிகாலை 2 மணி, 3 மணி, 5 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை. சென்னையில் நடந்த அதிகாலை காட்சியில் ரசிகர் ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து இந்த நிலை. ஆனால், பெரிய நடிகரின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, கூடுதலாக ஒரு காட்சிக்கு, அதாவது வழக்கமான 4 காட்சிக்கு பதிலாக 5 காட்சிக்கு சிறப்பு அனுமதியை அரசு அளிக்கும். கூலிக்கும் கூடுதல் காட்சிக்கு இன்று அல்லது நாளை அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கூலி படம் ஏ சான்றிதழை பெற்று இருப்பதால் 18 வயதுக்கு குறைவானவர்கள் தியேட்டரில் படம் பார்க்க அனுமதிக்கப்படமாட்டார்கள். பலருக்கு இது புரிந்து இருந்தாலும், ஒரு சிலர் குடும்பத்துடன் படம் பார்க்க டிக்கெட் புக் பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளுடன் படம் பார்க்க செல்லும்போது, குழந்தைகள் அனுமதிக்கப்படாத நிலையில், சில சிக்கல்கள் வரும் என்று தெரிகிறது.
18 வயதை தாண்டியவரா என்ற சந்தேகம் ஏற்பட்டால் ஆதார் அல்லது வேறு வயது சான்றிதழ் காண்பித்து தகுதியுள்ளவர்கள் படம் பார்க்க செல்லலாம். பொதுவாக, தன் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ரசிகர்களுடன் ரஜினிகாந்த் படம் பார்ப்பது இல்லை. அவருக்கு பதில் அவர் மனைவி லதா, பேரன்கள், மகள், குடும்பத்தினர் முதல் ஷோவை தியேட்டருக்கு சென்று பார்க்கிறார்கள். அந்தவகையில் நாளை மறுநாள் ரஜினி குடும்பத்தினர், இயக்குனர் படக்குழுவினர் முதல் ஷோவை தியேட்டருக்கு சென்று பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் 800க்கும் அதிகமான தியேட்டரில் கூலி வெளியாகலாம், வார் 2 என்ற ஹிந்தி படத்துக்கு 150 தியேட்டர்வரை கிடைக்கலாம். மீதி தியேட்டர்களில் தலைவன் தலைவி ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.