சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் |

'அமரன்' படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் 'மோஸ்ட் வான்டட்' நடிகராக மாறியிருப்பவர் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தில் நடித்து முடித்த பின்பு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஆரம்பமான புதிய படத்தில் நடிக்கப் போய்விட்டார் சிவகார்த்திகேயன். ஆனால், படப்பிடிப்பு ஆரம்பமான பின் சல்மான் கான் நடிக்கும் 'சிக்கந்தர்' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் இந்தப் படத்தை 'அம்போ' என விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் ஏஆர் முருகதாஸ். நீண்ட இடைவெளிக்குப் பின் படத்திற்கு 'மதராஸி' எனப் பெயர் வைத்திருக்கிறோம் என்று மட்டும் அப்டேட் கொடுத்தார்கள்.
அதனால், சிவகார்த்திகேயனும் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் நடிக்கப் போய்விட்டார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் 'சிக்கந்தர்' ஹிந்திப் படம் இந்த மாதம் 27ம் தேதி வெளியாகிறது. அந்தப் படம் வெளியாகும் வரை அவர் 'மதராஸி' படம் பக்கம் வர வாய்ப்பில்லை. சில பல கோடிகளை செலவிட்டு பல மாதங்களாக அதற்கு வட்டி கட்டி வருகிறார் 'மதராஸி' தயாரிப்பாளர். தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மொத்தமாக புறக்கணித்த ஏஆர் முருகதாஸுக்கு தேடிப் போய் வாய்ப்பு கொடுத்தால் இப்படி செய்துவிட்டாரே என்ற வருத்தத்தில் இருக்கிறாராம்.
ஏப்ரல் முதல் 'மதராஸி' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்கிறார்கள். ஆனால், 'பராசக்தி' கெட்டப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் உடனே 'மதராஸி' பக்கம் திரும்புவாரா என்பது அடுத்த கேள்வியாக உள்ளது.