என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் |
2025ம் ஆண்டில் தமிழ்த் திரையுலகத்தில் ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆண்டில் முதல் பெரிய படமாக அஜித் நடித்த 'விடாமுயற்சி' படம் கடந்த மாதம் வெளியானது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை. டீசர் மற்றும் டிரைலர்கள் வெளியான போது கிடைத்த வரவேற்பை வைத்தே அந்தப் படம் ஏன் ரசிக்கப்படவில்லை என்பதற்கான காரணம் புரியும்.
ஜனவரி மாதம் யூடியூபில் வெளியான 'விடாமுயற்சி' டீசர் இதுவரையிலும் 14 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், அஜித் நடித்து அடுத்து வெளியாக உள்ள 'குட் பேட் அக்லி' பட டீசர் இதுவரையில் 33 மில்லியன் பார்வைகளை கடந்து 34 மில்லியனை நெருங்கியுள்ளது. அதோடு 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்தது.
'விடாமுயற்சி' டீசரின் மொத்த பார்வைகளுடன் ஒப்பிடும் போது அதை 24 மணி நேரத்திலேயே இரு மடங்கிற்கும் அதிகமாகப் பெற்று 'குட் பேட் அக்லி' டீசர் சாதனை படைத்துள்ளது. இரண்டு படங்களுக்கும் இடையில் இப்படி ஒரு வித்தியாசம் இருப்பது ஆச்சரியமான ஒன்று.
டீசருக்குக் கிடைத்த வரவேற்பால் படத்தின் வியாபாரமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.