மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

இந்தியாவின் முன்னணி திரைப்பட பாடகி ஸ்ரேயா கோஷல். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனியாக இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். ஸ்ரேயா சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இயங்கி கொண்டிருக்கிறார். அவரது எக்ஸ் தளத்தில் 69 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் அவரது எக்கஸ் தளம் முடக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் உள்ளே புகுந்து முடக்கி உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், 'எனது எக்ஸ் தளம் கடந்த 13ம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. இதைச் சரிப்படுத்த எக்ஸ் தள குழுவினரை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால், தானியங்கி முறையில் வரும் பதில்களைத் தவிர எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனது கணக்கை நீக்கவும் முடியவில்லை, உள்ளே நுழையவும் முடியவில்லை.
எனவே, தயவுசெய்து எனது 'எக்ஸ்' பக்கத்தில் இருந்து வரும் எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம், எந்தச் செய்தியையும் நம்ப வேண்டாம், அனைத்தும் போலி மற்றும் மோசடி செய்திகளாக இருக்கும். எனது தளம் மீட்கப்பட்ட பிறகு தகவல் சொல்கிறேன்' என்று கூறியுள்ளார்.