இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவருக்கு வயது 85. இவரது பாடலுக்கு இன்றளவும் தனி மவுசு இருக்கிறது. தனது காந்தக் குரலால் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். இந்நிலையில், இன்று வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.
இதனை யேசுதாஸ் தரப்பில் மறுத்துள்ளனர். இது தொடர்பாக யேசுதாஸ் உதவியாளர் சேது இயாள் அளித்த விளக்கத்தில், 'பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் யேசுதாஸ் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக தமிழகத்தில் செய்திகள் வருகிறது. அது உண்மை இல்லை, அவர் பூரண நலத்துடன் இருக்கிறார். நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்' எனத் தெரிவித்துள்ளார்.