செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
நடிகை த்ரிஷா பிராணிகள் மீது அதிகப் பாசம் கொண்டவர். அவர் செல்லமாக வளர்த்து வந்த 'ஸாரோ' என்ற நாய் கடந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று இறந்து போனது. அது குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டிருந்த த்ரிஷா, கொஞ்ச நாட்களுக்கு வேலைகளிலிருந்தும், சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகியருக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
அவர் நடித்த 'விடாமுயற்சி' படம் வெளிவந்த போது கூட அது குறித்து கூட ஒரே ஒரு பதிவை மட்டுமே பதிவிட்டிருந்தார். இந்நிலையில் த்ரிஷா தற்போது புதிதாக நாய்க்குட்டி ஒன்றைத் தத்தெடுத்துள்ளார். “இஸ்ஸி'யை நான் தத்தெடுத்த நாள், அவள் என்னைக் காப்பாற்றினாள். எனது வாழ்க்கையில் ஒளி தேவைப்பட்ட போது, கடவுள் என்னிடம் அனுப்பி வைத்துள்ளார். என்றென்றும் என் காதலர் இவள் தான்” என அது குறித்து நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.