ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி | 'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் | அமரனில் மிஸ் ஆச்சு... சேயோனில் அது நடக்குமா? |

நயன்தாராவின் திருமண வீடியோ கடந்த மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வீடியோவில் தனுஷ் தயாரித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் 10 கோடி நஷ்டஈடு கேட்டு நயன்தாரா மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன், வீடியோவை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த பதில் மனுவை மனுதாரர் தரப்புக்கு அளிக்க வேண்டும். இது தொடர்பாக அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வருகிற ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தது.




