சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தமிழக அரசின் நிதியுதவியுடன் இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பின் சார்பில் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இண்டோ சினி அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன், பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.வி.எம்.சண்முகம், துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, திரைப்பட இயக்குனர்கள் கே பாக்யராஜ், பார்த்திபன், நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு மற்றும் திரைப்படத் துறை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: இந்தியாவின் முன்னணி திரைப்பட விழாவாக சென்னை சர்வதேச திரைப்பட விழா மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அரசால் திரைப்படத்துறையினருக்கு ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திரைப்படத்துறையினரின் நலவாரியத்தில் 27 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவ்வாரியம் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் வழங்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டு விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 500 கோடி மதிப்பீட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரி பணிகள் முடிவடையும். எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் 40 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள் தொடங்கவுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.