என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

சூர்யா நடித்து முடித்துள்ள பிரம்மாண்ட படம் கங்குவா. பாபி தியோல், திஷா பதானி  உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சுமார் 350 கோடியில் இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகி உள்ளது. 'பாகுபலி' படத்தில்  முதல் பாகத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் வகையில் கட்டப்பா ஹீரோவை குத்தும் காட்சி இடம்பெற்றது போல கங்குவாவிலும் அப்படி ஒரு காட்சி இருப்பதாக இயக்குனர் சிவா கூறியுள்ளார்.
இது குறித்த அவர் மேலும் கூறியிருப்பதாவது :  'கங்குவா'  கதை உருவாகும்போதே, இரண்டு பாகங்கள் எடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன். நிறைய கிளைக்கதைகள், திருப்பங்கள், கதாபாத்திரங்கள் என எல்லாமே அதிகம் இருப்பதால் இந்த கதையை, வெப்சீரிசாக கூட எடுக்கலாம்.  'பாகுபலி' முதல் பாகத்தில் எப்படி  இரண்டாம் பாகத்துக்கு ஒரு லீடு இருந்ததோ அப்படி 'கங்குவா'விலும் எதிர்பார்க்கலாம். அதோடு இரண்டாம் பாகத்தில் நிறைய ஆச்சரியங்களும் இருக்கும். என்றார்.
 
           
             
           
             
           
             
           
            