22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் காந்தி கிருஷ்ணா. நல்ல படங்களை இயக்கிய போதும் அதற்குப் பிறகு சரியான வாய்ப்புகள் இன்றி இருந்தார். 'செல்லமே' படத்தின் மூலம் விஷாலை அறிமுகப்படுத்தியவர் அவரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க முயற்சித்தார். ஆனால் விஷாலின் கால்ஷீட் கிடைக்காததால் அதை கைவிட்டார். இதுகுறித்து விஷால் மீது குற்றம் சாட்டி அவர் பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது 'பிரேக் பாஸ்ட்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த பிரேம் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வெங்கடேஷ்வரா கார்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். எம்வி பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராணவ், ரோஸிமின், கிருத்திக் மோகன் மற்றும் அமித்தா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் அர்ச்சனா, சம்பத்ராஜ், கஸ்தூரி, மதன் பாப், ரவி மரியா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், மேஹாஶ்ரீ, இயக்குநர் ரங்கநாதன் இணைந்து நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் காந்தி கிருஷ்ணா கூறும்போது “காதலர்களிடையே அன்பு மற்றும் சண்டை என்ற எவர்கிரீன் கான்செப்ட்தான் இந்தப் படத்திலும் கையாண்டு இருக்கிறோம். இப்போதுள்ள இளைய தலைமுறையினரிடையே மிகவும் பொதுவான விஷயமாக பிரேக்-அப் மாறிவிட்டது. காதலில் வரும் பிரச்சினைகளை அவர்கள் சகித்துக் கொள்ளாமலும், ஒருவருக்கொருவரின் வலியை உணராமலும் இருப்பதுதான் படத்தின் கரு. இது ஒரு மியூசிக்கல் லவ் படம். பாடல்களில் ஜி.வி.பிரகாஷ் மேஜிக் செய்திருக்கிறார். மணாலி, கஜகஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
சிறந்த பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இன்றைய இளைஞர்களுக்கான சிறந்த படமாக இருக்கும். இந்த படத்தில் அறிமுகமாகும் இளம் திறமைசாலிகள் வரும் நாட்களில் பெரிய அளவில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த படம் தயாரிப்பாளர்களுக்கு பெருமை சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
2009ம் ஆண்டு வெளிவந்த 'ஆனந்த தாண்டவம்' படத்திற்கு பிறகு இப்போதுதான் காந்தி கிருஷ்ணா படம் இயக்குகிறார்.