டென் ஹவர்ஸ் குறித்து இயக்குனர் பகிர்ந்த தகவல் | கமல் கட்சியில் இருந்து விலகியது ஏன்?: வினோதினி விளக்கம் | இன்னும் பெரிய ஸ்டார் நடிகர் ஆகாதது ஏன் : சித்தார்த் விளக்கம் | அமரனை போலவே பராசக்தி படமும் பயோபிக் கதை தான் | 'பராசக்தி' டைட்டிலை விட்டுக்கொடுக்கும் விஜய்ஆண்டனி? | அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தில் உறுப்பினரான ரவி வர்மன் | சினிமா மோசமான நிலையில் உள்ளது - விஷால் | பராசக்தி படத்தின் தலைப்பின் உரிமை யாருக்கு கொடுக்கப்பட்டது? - ஏவிஎம் நிறுவனம் வெளியிட்ட தகவல் | என் முடிவை நானே தான் எடுக்கிறேன் - ஜுனைத் கான் பேட்டி | எனக்கு பாய் பிரண்ட் இருக்காரு... அவர் விஷால் அல்ல - அபிநயா |
மலையாள குணசித்ர நடிகை மாலா பார்வதி. தமிழில் இது என்ன மாயம், நிமிர், மாரா, எப்ஐஆர், அன்னபூரணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக இவர் மதுரையில் தங்கி இருந்தார்.
அப்போது காலை 11.50 மணியளவில் மாலா பார்வதிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய ஒரு நபர், தாங்கள் ஒரு கூரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் எம்டிஎம்ஏ போதைப்பொருள் இருப்பதாகவும், இதனை நாங்கள் போலீசில் ஒப்படைத்தால் பெரிய பிரச்சினையை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும்” என்று கூறியுள்ளார். ஆனால், தான் யாருக்கும் பார்சல் அனுப்பவில்லை என்று மாலா பார்வதி கூறினார்.
சிறிது நேரத்திற்கு பிறகு மும்பை போலீஸ் அதிகாரி என்று கூறி ஒருவர் மாலா பார்வதிக்கு போன் செய்து அவரது வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். இதில் சந்தேகமடைந்த மாலா பார்வதி, உடனடியாக இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து அவர் கூறும்போது “மும்பை போலீஸ் என்று கூறி என்னை பல மணி நேரம் மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தனர். போலீஸ் அதிகாரி என்று கூறிய நபர் அனுப்பி வைத்த அடையாள அட்டையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக அவரது போன் இணைப்பை துண்டித்து விட்டேன்” என்றார்.
இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளிக்கவில்லை. என்றாலும் இதுபோன்ற மோசடி ஆசாமிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.