மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள படம் 'டென் ஹவர்ஸ்'. இப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால் பொங்கலுக்கு நிறைய படங்கள் வெளியானதால் டென் ஹவர்ஸ் படத்திற்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் வெளியீடு தள்ளிப்போனது.
இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், "எந்த தயாரிப்பாளர்களிடம் போனாலும் உங்கள் பட்ஜெட் என்ன என்பது தான் முதல் கேள்வியாக இருந்தது. அதனால் ஹாரர் கலந்த கிரைம் த்ரில்லர் ஜானரில் படம் உருவாக்க முடிவு செய்தேன். அதில் வித்தியாசம் காட்டலாம் என யோசித்து தான் ஓடுகிற பஸ்சில் கதைகளம் நடைபெறுவது போல் யோசித்தேன். இந்த படத்தின் ஹிந்தி, தெலுங்கு உரிமம் பிஸ்னஸ் ஆன பிறகு தான் நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம் என்பதை உணர்ந்தோம்" என தெரிவித்துள்ளார்.