ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
தென்னிந்திய சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரோஜா ரமணி. 1967ல் வெளியான 'பக்த பிரஹலாதா' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அவர் பிரகலாதா வேடத்தில் நடித்தார். அப்போது அவருக்கு வயது 5 . இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் இந்த படம் தமிழிலும் வெளியானது. மேலும் இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார்.
இந்தப் படத்தில் நடிக்கும் வரை ரோஜா ரமணி ஒரு திரைப்படம் கூட பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பிறந்த ரோஜா ரமணி படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்ற இடத்தில் ஏவிஎம் செட்டியார் கண்ணில் பட்டு நடிகையாக அறிமுகமானார். ஐந்து வயது முதல் 12 வயது வரை சுமார் 80 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு நாயகியாக நடித்தார்.