துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! |

'இமைக்கா நொடிகள்' மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா, தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4, அகத்தியா படங்களில் நடித்தார். தற்போது 'பார்ஜி-2' என்ற ஹிந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் ஆக்ஷன் நாயகியாக நடிக்கும் ராஷி கண்ணா கடந்த சில நாட்களாக சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.
நேற்று நடந்த படப்பிடிப்பில் ராஷி கண்ணா உயரமான மேடை ஒன்றில் இருந்து கீழே குதித்தார். இதில் டைமிங் மிஸ்சாகி தரையில் விழுந்தார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. உள்காயத்தால் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. கை மற்றும் கால்களிலும் காயம் ஏற்பட்டது.
முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மருத்துமனையில் சிகிச்சை பெற்றார். சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ராஷிகா இல்லாத காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராமில், "சில கதாபாத்திரங்களுக்கு தேவையானதை செய்துதான் ஆக வேண்டும். ஏற்படும் காயங்களை பொருட்படுத்தக்கூடாது. நாமே புயல் ஆன பிறகு, இடி-மின்னல் என்ன செய்துவிடும்?", என்று பதிவிட்டுள்ளார்.