‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகை ஆஷிகா ரங்நாத். இந்த ஆண்டு மட்டும் அவர் நடித்த 3 படங்கள் இதுவரை வெளியாகி உள்ளது. தற்போது 'காதவைபவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் தெலுங்கு படமான 'விஸ்வம்பரா' அடுத்த ஆண்டு வெளியாகிறது. தமிழில் 'பட்டத்து அரசன்' படத்தில் நடித்தார். இந்த படம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. சற்குணம் இயக்கிய இந்த படத்தில் அவர் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது அவர் நடித்து வரும் தமிழ் படம் 'மிஸ் யூ'. இந்த படத்தில் அவர் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார், கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனத்தின் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். மாப்ள சிங்கம், களத்தில் சந்திப்போம் படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்குகிறார். ரொமான்டிக் திரில்லர் ஜார்னரில் படம் தயாராகி வருகிறது.