சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் | ''முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள்'' : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள் | தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா? | 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்! |

ஹிந்தியில் வரவேற்பை பெற்ற ‛அந்தாதூன்' படம் தமிழில் பிரசாந்த் நடிக்க ரீ-மேக் ஆகி உள்ளது. இவரது தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த், சிம்ரன், ஊர்வசி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் ஆக., 15ல் படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்திலிருந்து அந்தகன் ஆன்தம் என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். இதை நடிகர் விஜய் வெளியிட்டார். அனிருத், விஜய் சேதுபதி இணைந்து பாடி உள்ளனர்.
இந்த பாடலின் இசை என்னுடையது அல்ல என தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன். இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், “இது நான் வழங்கிய இசையோ, மிக்சிங்கோ அல்ல” என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் வடிவேலு மீம்ஸை பகிர்ந்து, ‛‛வரலாற்றில் முதன்முறையாக ஆடியோ லேபிளும் பார்வையற்ற வேடத்தில் நடிக்கிறது. இது என் பாடலா என்பதை ஆய்வு செய்வதற்கு நான் பணம் வாங்குவதில்லை'' என பதிவிட்டுள்ளார்.
அந்தகன் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். ஆனால் அவரே இது நான் போட்ட இசை அல்ல என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது உள்ளது.




