காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'தி கோட்'. இப்படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி உள்ளன. மூன்றாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ள இப்படம் பற்றி புதிதாக இரண்டு அப்டேட்கள் கோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டிற்குச் சென்று அங்கு 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் இருந்த அஜித்தை சந்தித்தார் வெங்கட் பிரபு. அப்போது 'தி கோட்' படத்தின் பாடல் ஒன்றின் வீடியோவைக் காட்டினாராம். அதைப் பார்த்து ரசித்த அஜித் உடனடியாக விஜய்க்கு போன் செய்து அதைப் பற்றிப் பாராட்டிப் பேசினாராம்.
மற்றொரு அப்டேட், சமீபத்தில் படத்தின் இடைவேளை வரையிலான முதல் பாதியை விஜய் பார்த்தாராம். பார்த்துவிட்டு படம் விறுவிறுப்பாக நகர்கிறது என்று சொன்னாராம். அதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்களாம்.
படம் வெளியாக இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் இது மாதிரியான அப்டேட்கள் அடிக்கடி வெளியாகலாம்.