ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாக உள்ளது தென்னிந்திய திரைப்ட தொழிலாளர் சம்மேளனம். சுருக்கமாக பெப்ஸி என்றழைக்கப்படுகிறது. இதன் முக்கிய கூட்டம் இன்று(ஜூலை 25) சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது.
கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் 'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை என்பவர் உயரத்தில் இருந்து விழுந்து சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்தார். திரைப்பட படப்பிடிப்புகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று சென்னையில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை பெப்ஸி நிர்வாகம் நடத்தியது.
இன்றைய கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பாதுகாப்பு அம்சங்கள், மருத்துவ உதவிகள் உள்ள படப்பிடிப்பு நிலையங்கள், அவுட்டோர் படப்பிடிப்பு இடங்களில் மட்டுமே பணிபுரிவோம் என அறிவித்துள்ளனர்.
அனைத்து கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு
தீ விபத்து நடக்காமல் இருக்க அனைத்து உபகரணங்கள், பாதுகாபப்பு
விபத்து நடந்தால் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி
பெண் கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு கழிவறை வசதி, உடை மாற்ற வசதி
லைட்மேன் தொழிலாளர்களுக்கு ஹெல்மெட், ரிப்லேக்டிவ் ஜாக்கெட், கிளவுஸ், காலணி, பெல் உள்ளிட்ட வசதிகள்
ஸ்டுடியோக்களில் உள்ள கோடாக்களில் (உயரமான இடத்தில் லைட் வைக்கும் இடம்) பெல் அணிவது, பாதுகாப்பு கருவிகள்,
என நிறைவேற்ற வேண்டிய சில முக்கியமான கோரிக்கைகளையும் இன்றைய கூட்டத்தில் தெரியப்படுத்தியுள்ளனர்.
சிறிய தயாரிப்பாளர்கள் தக்க பாதுகாப்பு வசதிகளையும், விபத்து நடந்தால் நஷ்டஈடும் தருவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.