பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

ஹிந்தியில் வரவேற்பை பெற்ற ‛அந்தாதூன்' படம் தமிழில் பிரசாந்த் நடிக்க ரீ-மேக் ஆகி உள்ளது. இவரது தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த், சிம்ரன், ஊர்வசி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் ஆக., 15ல் படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்திலிருந்து அந்தகன் ஆன்தம் என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். இதை நடிகர் விஜய் வெளியிட்டார். அனிருத், விஜய் சேதுபதி இணைந்து பாடி உள்ளனர்.
இந்த பாடலின் இசை என்னுடையது அல்ல என தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன். இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், “இது நான் வழங்கிய இசையோ, மிக்சிங்கோ அல்ல” என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் வடிவேலு மீம்ஸை பகிர்ந்து, ‛‛வரலாற்றில் முதன்முறையாக ஆடியோ லேபிளும் பார்வையற்ற வேடத்தில் நடிக்கிறது. இது என் பாடலா என்பதை ஆய்வு செய்வதற்கு நான் பணம் வாங்குவதில்லை'' என பதிவிட்டுள்ளார்.
அந்தகன் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். ஆனால் அவரே இது நான் போட்ட இசை அல்ல என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது உள்ளது.