'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கன்னட சினிமாவில் வெளிவந்த 'கே.ஜி.எப் 1 மற்றும் 2' படங்களை இயக்கியது மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அதன் பிறகு பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை, அதேசமயம் வசூல் 650 கோடியை கடந்தது.
சலார் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் பிரசாந்த் நீல் அளித்த பேட்டி ஒன்றில் சலார் படத்தில் உள்ள சில குறைகள் குறித்து பேசியதாவது, "சலார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு கிடைக்காதது எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. கே.ஜி.எப் படத்தின் மிகப்பெரிய வெற்றியினால் சலார் படத்தின் உருவாக்கத்தில் ஒருவேளை அலட்சியமாக இருந்துவிட்டேன் எனவும் தோன்றியது. அதில் கற்ற பாடத்தினால் சலார் 2ம் பாகம் எனது சிறந்த படமாக வரவேண்டும் என்பதற்காக திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.