பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
பிலிமினாட்டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் விவேக் குமார் கண்ணன், காயத்ரி சுரேஷ், விவேகானந்தன்.ஜி தயாரித்துள்ள படம் 'கொட்டேஷன் கேங்'. விவேக் குமார் கண்ணன் எழுதி இயக்கியுள்ளார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்ய, டிரம்ஸ் சிவமணி இசை அமைத்துள்ளார்.
ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி, சாரா அர்ஜூன், ஜெயப்பிரகாஷ், அஷ்ரப்மல்லிசேரி, பிரதீப் சுப்ரமணியன், அக்ஷயா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பிரியாமணி பேசியதாவது:
இயக்குனர் என்னிடம் சொன்ன முதல் கதை சில காரணங்களால் செட்டாகவில்லை. பிறகு சொன்ன இக்கதை பிடித்ததால் நடித்தேன். காண்ட்ராக்ட் கில்லர் எனப்படும் கூலிக்கு கொலை செய்யும் சகுந்தலாவாக இந்தபடத்தில் நடித்துள்ளேன். சண்டைக் காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து நடித்துள்ளேன். தோற்றமும், பாடிலாங்குவேஜூம் வித்தியாசமாக இருக்கும். இதுவரை உங்களுக்கு சன்னி லியோன் பற்றி வேறொரு இமேஜ் இருந்திருக்கும். இதில் அந்த இமேஜை அவர் அடித்து நொறுக்கி இருக்கிறார். அவரது பத்மா கேரக்டர் அனைவருடைய எண்ணத்தையும் மாற்றும் என்றார்.
பின்னர் “தமிழில் நடிக்க நீண்ட இடைவெளி ஏற்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரியாமணி, “தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் இருந்தும் எனக்கு நடிக்க அழைப்புகள் வந்தன. நிறைய பேர் கதை சொன்னார்கள். அந்தகதைகள் எனக்கு பிடிக்கவில்லை. முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை. எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன். 'கொட்டேஷன் கேங்க்' கதையை கேட்டபோது எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தது தெரிந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றார்.
நடிகை சன்னி லியோன் பேசும்போது, "இந்தப்படத்தில் எனக்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. என்னைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இந்தப்படம் நிச்சயம் மாற்றும். படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.