தமிழ் திரையுலகில் எதிர்பாராமல் திடீரென ஒரே படத்தில் காதலில் விழுந்து அப்படியே திருமணத்திலும் இணைந்த ஜோடி என்றால் அது அஜித் ஷாலினி ஜோடி தான். 1999ல் அமர்க்களம் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் ஷாலினி செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் அமர்க்களம் படத்திற்கு மட்டுமல்லாது அஜித்தின் பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் பரத்வாஜ், அமர்க்களம் படத்திற்கு பாடல்கள் உருவாக்கிய சூழல் குறித்தும் அஜித் குறித்தும் பேசும்போது ஒரு புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
“அந்த படத்தில் நடித்த போதுதான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் மலர்ந்தது. அந்த சமயத்தில் அந்த படத்திற்காக “உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு” என்கிற பாடலை உருவாக்கினோம். படத்தில் அது ஷாலினி அஜித்திற்காக பாடுவது போல இடம் பெற்ற இந்த பாடலை உருவாக்கிய போது அதைக் கேட்டு வியந்து போன அஜித் அதை தனக்காக தனியாக ரெக்கார்ட் பண்ணி கொடுக்கும்படி கேட்டு வாங்கிக் கொண்டார்.
பின்னாளில் அந்த பாடலைத் தான் ஷாலினியிடம் அஜித் தன் காதலை சொல்வதற்காக பயன்படுத்திக் கொண்டார் என்று தெரியவந்தது. அதுமட்டுமல்ல அதற்கு முன்பாக அவர் ரேஸில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அப்போது அதற்காக ஒரு உற்சாக பாடல் ஒன்றை தனக்கு உருவாக்கி தரும்படி பெர்சனலாக கேட்டுக் கொண்டார். நானும் அதை அவருக்கு உருவாக்கி கொடுத்தேன்” என்றும் கூறியுள்ளார்.