நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் பிரசாந்த் 90கள் மற்றும் 2000 ஆரம்ப காலகட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் படங்களில் நடிப்பதில் இடைவெளி விட்டிருந்தார். அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தொடர் தோல்வியை தழுவியது.
கடைசியாக பிரசாந்த் நடித்து வெளிவந்த 'அந்தகன்' படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இன்று பிரசாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரசாந்த் 55வது படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார் என இன்று பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து அறிவித்துள்ளனர். ஹரி, பிரசாந்த்தை வைத்து ‛தமிழ்' எனும் படத்தை இயக்கியதன் மூலம் 2002ம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமானார். இப்போது கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு பிறகு ஹரி, பிரசாந்த் கூட்டணி மீண்டும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.