'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
திருமணத்திற்கு பிறகு மீண்டும் எடையை குறைத்து பழைய உடல்கட்டுக்கு மாறிய காஜல் அகர்வால் படங்களில் நடித்து வருகிறார். கமல் உடன் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ஹிந்தியில் உமா, தெலுங்கில் சத்யபாமா போன்ற படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு காஜல் அகர்வால் சென்றபோது அவருடன் பல ரசிகர்கள் செல்பி எடுத்துள்ளார்கள். அப்போது செல்பி எடுக்க அவரை நெருங்கி வந்த ஒரு ரசிகர், காஜல் அகர்வாலின் இடுப்பில் கை வைத்து செல்பி எடுக்க முயன்று அவருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. செல்பி எடுப்பதற்காக காஜலின் அருகில் சென்ற ரசிகர் திடீரென்று அவரது இடுப்பில் கை வைப்பது, அதை பார்த்து அதிர்ச்சியுடன் காஜல் அகர்வால் ரியாக்ட் செய்வது அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.