நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் |
ராயன் படத்தை இயக்கி முடித்திருக்கும் தனுஷ், அதையடுத்து தனது சகோதரி மகன் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கிக் கொண்டே, சேகர் கம்முலா இயக்கும் பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் மகா சிவராத்திரியான நாளை மார்ச் 8ம் தேதி இந்த படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாவதாக அப்படத்தை தயாரித்து வரும் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் அறிவித்து இருக்கிறது.