Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டியின் பெயர் மாற்றப்பட்டு வெளியான பிரம்மயுகம்

16 பிப், 2024 - 12:40 IST
எழுத்தின் அளவு:
Mammootty-character-name-changed-in-Brahmayugam

நடிகர் மம்முட்டி நடிப்பில் கடந்த வருடம் வெளியான கண்ணூர் ஸ்குவாட், காதல் : தி கோர், நண்பகல் நேரத்து மயக்கம் என அனைத்து படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. வசூல் ரீதியாகவும் டீசன்டான வெற்றியை பெற்றன. இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் பிரம்மயுகம் என்கிற படம் தற்போது வெளியாகி உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெறுவதாக இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் குஞ்சுமோன் போட்டி என்கிற 70 வயதுக்கு மேற்பட்ட கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்துள்ளார்.

ஆனால் இந்த பெயர் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தங்களது மூதாதையரின் பெயரை குறிப்பிடுவது போலவும் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவது போலவும் இருப்பதாக கூறி இந்தப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து பதில் அளிக்க படக்குழுவினருக்கு உத்தரவிட்டது. படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் இந்த பெயர் பிரச்சினையால் ரிலீஸ் தடைப்படக்கூடாது என முடிவு செய்த படக்குழுவினர் மம்முட்டியின் கதாபாத்திரமான குஞ்சுமோன் போட்டி என்பதை கொடுமோன் போட்டி என மாற்றி தணிக்கை குழுவின் அனுமதி பெற்று படத்தை வெளியிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செக் மோசடி வழக்கில் பிரபல தயாரிப்பாளருக்கு ஒரு வருட சிறை தண்டனைசெக் மோசடி வழக்கில் பிரபல ... திலீப் பட டைட்டில் விவகாரம் : பிரச்சனையை சென்சாரிடம் ஒப்படைத்த நீதிமன்றம் திலீப் பட டைட்டில் விவகாரம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in