Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி: அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

28 டிச, 2023 - 11:28 IST
எழுத்தின் அளவு:
CM-Stalin-pays-tribute-to-Vijayakanth-in-person:-Funeral-with-state-honors


நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் உடல்நிலை பாதிப்படைந்ததால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்ட நிலையில் இன்று காலை அவர் காலமானார்.

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛அன்பிற்கினிய நண்பர் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர். நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டசபை உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர்.

குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர். தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் கருணாநிதி தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது கருணாநிதி அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். கருணாநிதி அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், கருணாநிதி மறைவெய்ந்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள கருணாநிதியின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.

தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. கருணாநிதி அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த 'மக்கள் ஆணையிட்டால்' என்ற படத்தில், கருணாநிதி எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.

கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழகத்திற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்''. இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரசு மரியாதை
மேலும், விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நேரில் அஞ்சலி செலுத்த வந்த ஸ்டாலினிடம், பிரேமலதா, விஜயகாந்தின் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டுகோள் விடுத்தார்.
சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலை கோயம்பேடில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே விஜயகாந்தின் உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அஞ்சலி செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. கட்சி அலுவலகத்தில் கூட்டம் அதிகமாகும் பட்சத்தில் ராஜாஜி ஹாலுக்கு மாற்றப்படலாம்.
பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி: விஜயகாந்த மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்தின் நடிப்பு பலரின் இதயங்களை கவர்ந்தது. பொது சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை நிரப்புவது கடினம். விஜயகாந்துடனான எனது நினைவுகளை அன்புடன் நினைவுகூர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல்
காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‛‛தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இருக்கும். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அலை ஓசை உள்ள வரை உங்கள் நினைவோசை : விஜயகாந்திற்கு திரையுலகினர் இரங்கல்அலை ஓசை உள்ள வரை உங்கள் நினைவோசை : ... கண்ணீரில் நனையும் தமிழகம் : விஜயகாந்த்திற்கு திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி கண்ணீரில் நனையும் தமிழகம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in