டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

‛இடம் பொருள் ஏவல்' படத்தின் போது அதில் முதலில் நடித்து, பின்னர் விலகிய நடிகை மனிஷா யாதவுக்கு அந்தப்பட இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் தொந்தரவு கொடுத்தார் என பத்திரிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டினார். இதுதொடர்பான வீடியோ வைரலானது.
இதற்கு சீனுராமசாமி, ஒரு குப்பை கதை பட இசை வெளியீட்டு விழாவில் மனிஷா தனக்கு நன்றி தெரிவித்த வீடியோவை பகிர்ந்தார். அதோடு, “நான் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருந்தால் பின் எதற்காக எனக்கு நன்றி சொன்னார். 10 ஆண்டுகள் சினிமாவில் நடித்துவிட்டு தான் அவர் போயிருக்கிறார். மீண்டும் வாய்ப்பு இருந்தால் என் படத்தில் அவர் நடிப்பார்” என்றார்.
இதற்கு மனிஷா, ‛‛ஒரு குப்பை கதை பட இசை வெளியீட்டு விழாவில் மேடையில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது போல் தான் சீனு ராமசாமிக்கும் நன்றி சொன்னேன். 9 ஆண்டுகளுக்கு முன் அவர் பற்றி கூறிய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்னிடம் அநாகரிகமாக நடந்த ஒருவருடன் மீண்டும் பணியாற்ற என்ன தேவை இருக்கிறது. சீனு ராமசாமி உண்மையை பேச வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.




